செவ்வாய், 23 ஜூன், 2009

காயத்திரி
உன் பால்வடியும் முகமும் ....
பவமான பார்வையும் ...
அப்பாவித்தனமான தோற்றமும் ....
என் மனதை கொள்ளை கொண்டு ...
போனதடியே என் கிராமத்து சிட்டே ....
உன் உருவத்தில்லே கிராமத்து .....
மண்வாசனை மணக்குதடி பெண்ணே ....
காயத்திரி உன் பெயரோ .....
காயம் பட்டு திரிகிறதே ...
உன் -நினைவால் என் மனமே ....
நாகரீகம் அறியா கிராமத்தில் ....
படிப்பின் முக்கியமுணர்ந்து ....
படிப்பு தந்த பெற்றோர்களுக்கு ....
நான் நன்றி சொல்லிடுவேன் .......
பள்ளியில் உன்னை பார்த்த ....
நாள் முதலே உனது ரசிகனானேன் ....
உன்னை என் நட்பாக வரித்து .......
இருவரும் பழகினோம் தோழமையாக ...
பள்ளி படிப்பு முடிந்து நான் ....
கல்லூரியில் சேர்ந்தபின்னும் ...
என் மனம் உன் நட்பையே தேடியது....
நீயும் அடுத்த வருடம் ...
என் கல்லூரிக்கே படிக்க வந்ததும் ...
நான் தேன் குடித்த வண்டாக மயாங்கினேன்....
ஆனாலும் உன்னை நேசிப்பதை ...
சொல்ல தைரியம் இல்லாது ...
குடும்ப சூழ்நிலை காரணமாக ....
படிப்பு முடிந்ததும் ..வெளிநாட்டில் ...
வேலைக்கு சென்ர்றேனே..-அங்கு ...
எத்தனையோ கவர்சிகளை கண்டபோதும் ....

என் -மனம் உன் கிராமத்து உருவத்தையே ...
எண்ணி எண்ணி மயங்குகிறது கண்ணே .....
நீயும் படிப்பு முடிந்து குழந்தைகளுக்கு ...
கல்வி புகட்டும் பணியில் அமர்த்து ...
கேட்டு மிக்க மகிழ்வு கொண்டேனே...அன்பே ..
என்போல் நீயும் எனை நினைப்பாயோ ...
இல்லை -அந்த ஹரியை கும்பிடும் போதாகினும் ...
இந்த ஹரியை நினைத்திடுவாயோ கண்ணே ..
உன்னால் காயம் பட்டு திரியும் ....
என் மன காயத்திற்கு மருந்து ....
போடுவாயோ கண்ணே கயத்திரியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக