புதன், 10 ஜூன், 2009

நல்லதோர் மனம்
நல்லதோர் மனம் கிடைத்தாலும் -அதை ...
மனிதர்கள் எப்போதும் மதிப்பதுண்டோ?
சொல்லடி சிவசக்தி -மனிதரில் ...
சுடர்மிகும் அறிவுடன் -பிறந்தவர்க்கு ....
வல்லமை தருவாயோ -இந்த -
நிலைகெட்ட சில மனிதர்களின் ....
நிலைகளை ஏர்ப்பதற்க்கோ .....
நல்லதோர் மனம் படைத்த-மானிடரை .....
நம் -மாநிலம்பயன்பட ஏர்ப்பதற்கு
சொல்லடி சிவசக்தி இப் -பூமியில் ....
இவர்களை சுமையாய் கருதும் ..
தீய நெஞ்சம் படைத்தோர்க்கு ....

நல்மனம் படைதோர்க்கு -மீண்டும் ...
மீண்டும் வரும் தீங்கினை .....
தாங்கும் திடமான உடல் கேட்டேன் ...
தீதிலா அம்மனங்களுக்கு -தினம் ....
நன்மை வேண்டும் சில -உண்மை ....
மனம் கேட்டேன் ...
அவர்களின் மனதினை -தீ சுட்டாலும் ...
சிவா சக்தியை மட்டும் -நினைத்து ..
பாடும் நல்ல மனம் கேட்டேன் ....
நல்லதோர் மனம் படைத்தோர்க்கு ....
எப்போதும் - மாறாத நிலையான ..
மனம் கேட்டேன் -இவை ....
கொடுப்பதில் உனக்கொன்றும் ...
தடை உள்ளதோ சொல்லடி -சிவா சக்தி


வேலை நிறுத்தம்
நான் கணினியன் முன் -அமர்ந்ததும் ..
விரல்கள் மடங்கி கைகளை - இறுகக்...
மூடியது தன்எலும்பு தேய்கிறது -என்று ....

எளுத்துகளாகிய தம் தலையில் ....
தட்டி தட்டி அதன் வடிவம் -.....
தேய்கிரதென்று கீபோர்டும் .....

மௌசெய் சுற்றி சுற்றி -வேலை ...
கொடுப்பதால் அதற்க்கு -தலை ...
சுற்றுகிரதென்று அதுவும் .....

இவைகளை இயக்க -பார்வை ....
உதவுவதால் தனது -விழிகள் ....
எரிச்சல் அடைகிறதென்று '.....
கண்களும் வேலை நிறுத்தம் ...
செய்தனவே ஏன் என-கேட்டதற்க்கோ

நீ -உன் நண்பர்களுடன் பேச......
எங்களை விடாமல் நோகசெய்கிறாய் ....
உன்னுடன் இருக்கும் எங்களை -பற்றி ....
சிரிதேனும் கவலை இருகிறதா ...
உனக்கு -என வேதனை பட்டன ....

பிறகுதான் உறைத்தது -ஏன் ...
.புத்தி வேலை செய்யவில்லை என்று ..
இப்போது -தினமும் சிலமணி நேரம்
அவைகளுக்கு ஓய்வு தருவதால் .....
வேலை நிறுத்தம் செய்வதை
அவைகள் விட்டு விட்டன ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக