புதன், 10 ஜூன், 2009

இமயம்
இமயம் ஏறப்போகும் -இமாலயங்களுக்கு ..
உங்கள் பயணம் வெற்றி பாதையில் .....
ஏறி -உச்சி சென்று இமயத்தை .....
தொட்டு -நம் தாய் நாட்டின் .....
தேசிய கொடியை நட்டு .....
பட்டொளி வீசி பறக்கச்செய்து ......
இந்தியர் ஒவ்வொருவரும் ....

இமயம் தொடும் ஆசையை -தூண்டவும் ..
எல்லோருக்கும் இப் பாக்கியம் ....
கிடைக்காவிட்டாலும் இந்தியர் ...
ஒவ்வொருவரும். வாழ்கையில் .....
தம் லட்சியங்களை அடைந்து ......
வெற்றி எனும் சிகரத்தை -தொட்டு ..
உலக நாடுகளின் பட்டியலில் ...
இந்திய இந்திய என்று -அனைவரும் ...
புகழும் நிலையின் சிகரத்தை ...
எட்ட -ஆவலை தூண்டும்.-
நம்பிக்கை ஊட்டும் உமக்கும் .....
உம் -குழுவினர்க்கும் உங்கள் ...
பயணம் சிறப்புடன் முடிவு ...
பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்


நட்பு
தோழிகளாக இல்லாவிட்டாலும் ....
எங்கேயோ பிறந்து எங்கேயோ ...
வளர்ந்த நாம் இங்கே சந்தித்து -கொண்டோம் ...

நமை இணைத்த நட்பு பாலமாக ..
இணையதளம் இருந்தாலும் .....
இறுதிவரையோ இந்தநிமிடமோ ..
தொடருவது இறைவன் -செயல் ...
இருந்தும் இருவரும் நலம் ..
விசாரித்து கொள்கிறோம் எப்போதும் ....
என்றோ எப்போதோ சந்தித்தாலும் .....

கடவுளின் கருணை நம்மையும் ...
சந்திக்க செய்தானே என மனம் -மகிழும் ....
மீண்டும் அவரவர் பாதையில் ....
பயணத்தை தொடர்ந்தாலும் ....

எப்போதாவது மீண்டும் நாம் -சந்திக்க
வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொள்வோம் ...
மனதில் ஒரு வலி எற்பட்டாலும் ....
மீண்டும் நாம் சந்திப்போம் -என்ற....
நம்பிக்கை உண்டு நிச்சயமாக ...
நம் குழந்தைகளின் திருமணம் ..
நம் நட்பு பாலத்தை பலப்படுத்தும்


காதல்
காதலே காதல்லே நீ போய்விடு ....
காலத்தை அழிப்பாய் போய்விடு ...
கவிதையை கவிதையை தூண்டாதே...
கடமை செய்வதை தடுக்காதே ....
கடவுளை வெறுக்க செயாதே ...

உயிரை உயிரை எடுக்காதே ...
உலகத்தை விட்டு பிரிக்காதே....
பாச்சத்தை நேசத்தை அழிக்காதே ...
பாவத்தை நீயும் சேர்க்காதே ...
உன்னை மட்டும் நேசிப்பதே .....
உலகம் என்று உணர்த்தாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக