கவிதை
நம் -வாழ்க்கையோ ....
ஒரு கவிதைதான் ....
அதன்-வரிகளோ
நாம் வாழும் முறைகளாம் ..
வார்த்தையோ நம் விதிகளாம் ....
அதில் -நன்மையும் இருக்கலாம் ...
தீமையும் இருக்கலாம் ....
ஆனால் -கவிதையின் முடிவு ...
மட்டும் -அந்த எமனின் கையில்
புறா
அமைதியின் சின்னம் -புறா ...
சமாதானத்திற்கு தூதூ -புறா ...
வீட்டு கூட்டில் கூட்டு -புறா ...
அமைதிக்கும் சமாதானத்திற்கும் ..
சின்னமாக இருந்து -புறா ....
அமைதி காப்பதால் -அதன் ..
விருப்பமின்றி மாறுகிறது ...
ஓட்டலில் மாறுகிறது ...
ரோஸ்ட்டு புறாவாய்
விரும்புதல்
நீ -விரும்ம்பும் ஒன்றை விட .
உன்னை -விரும்பும் ஒன்றை -
ஏற்று -வாழ்ந்து பார்...
உண்மை அன்பும் உறவும் ...
புரியும் உனக்கு -நீ ..
முகம் பாராமல் வரிகளில்- பேசும் ,,,
காதலை விட முகம் -பார்த்து ....
மனம் அறிந்து ஏற்கும் காதல் -உயர்ந்தது ..
இக் காதலே சாதலிலும் ...
ஒன்று சேற துடிக்கும் ....
உலகில் -எத்தனையோ ஏமாற்று ....
வேலைகள் நடக்கின்றன ...
உம்- திட மனதை கலங்க விட்டு ...
கடைசியில் பித்தனாகி விடாதே ...
இதுவே -வாழ்கையும் இல்லை ...
காதலும் -கானல் நீறே -வயது ....
கோளாறினால் தோன்றும் ஆர்வம் ...
உண்மையையும் பொய்மையையும் ..
ஆராந்து ஏற்றல் அவசியம் ..
மனதை -தொலைத்து விட்டு ...
.அதை -தேடுதல் வேண்டாம் ...
உன் -வாழ்வையும் குடும்ப...
நிம்மதியையும் தொலைத்து விடாதே...
நடப்பது நன்மைக்கே -இறைவன் ..
விட்ட வழி என்று -உன் மனதை ..
திடபடுத்து நிலைபடுத்து ...
இல்லையோ நீ மனம் கலங்கி ....
அறிவு மழுங்கி மதி மயங்கி ..
பித்தனாவாய் நீ பித்தனாவாய்..
எதையும் தாங்க உன்னை -நீ ..
உறுதி படுத்து நீ உறுதி படுத்து
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக